சிவகங்கையில் வேகமெடுத்து பரவிவரும் கொரோனா தொற்றால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் சென்ற வருடம் ஏப்ரல் கொரோனா பரவியது. இதையடுத்து கொரோனா படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வருவதால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். அதன்பின் சிறிது நாட்களாக குறைந்திருந்த கொரோனா மீண்டும் வேகமெடுத்து பரவி வருகிறது. கொரோனா தோற்றால் கடந்த 18-ஆம் தேதி அன்று 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 19-ஆம் தேதி அன்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வாணியங்குடி பகுதியில் டாக்டர் ஒருவருக்கும், மஜித் ரோடு பகுதியில் கிளினிக் வைத்து நடத்தி வரும் மருத்துவர் ஒருவரும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மருத்துவர்கள் உட்பட 14 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து சுகாதார துறையினர் பாதிக்கப்பட்டவர்கள் இருந்த இடங்களில் முகாமிட்டுள்ளனர். இந்த முகாமில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் மாதிரிகளை சேகரித்து பரிசோதனை செய்து வருகின்றனர். வேகமெடுத்து வரும் கொரோனா வைரஸ் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.