Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தீவிரப்படுத்தப்பட்ட வாகன சோதனை… ஆவணமில்லாமல் சிக்கியவை… பறக்கும் படை பறிமுதல்..!!

நாகையில் ஆவணமில்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ. 64 ஆயிரத்து 355 பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

நாகை மாவட்டத்தில் உள்ள குரவப்புலம் வெள்ள கேட் அருகே தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த மைக்ரோ பைனான்ஸ் நிறுவன ஊழியர் வாகனத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் வாகனத்தில் ரூ. 64 ஆயிரத்து 255 கொண்டு செல்வது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணம் குறித்து அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் அவர் வேதாரண்யம் பகுதியில் உள்ள கிராமின் கோட்டா என்ற மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தில் பணி புரிவது தெரிந்தது. மேலும் அவர் வேதாரண்யம் பகுதியில் உள்ள அவரிக்காடு, வெள்ளப்பள்ளம் கிராமங்களில் கொடுத்திருந்த கடனை வசூல் செய்து கொண்டு வந்ததாகவும் கூறியுள்ளார். ஆனால் அதற்கான ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை. இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் அவர்களிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்து வேதாரண்யம் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

Categories

Tech |