கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரிப்பதால் ராஜஸ்தான் மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூர், ஜோத்பூர், அஜ்மீர், பைக்னர்,உதய்ப்பூர், அல்வார் மற்றும் பில்வாரா ஆகிய நகரங்களில் இரவு 8 மணியிலிருந்து காலை 6 மணி வரை பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த நகரங்களில் அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் மக்கள் நடமாடுவதற்கு தடை விதிக்கப்படும்.
மேலும் முகக்வசம் அணியாதவர்களுக்கு அபராதத் தொகையாக 500 ரூபாயிலிருந்து 200 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். மேலும் மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரிப்பதால் சில இடங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ராஜஸ்தானில் இதுவரை இல்லாத அளவாக 3007 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தில் ராஜஸ்தானில் தொற்று பாதிப்பு உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.