Categories
அரசியல் மாநில செய்திகள்

தீவிரமடையும் அரசியல் களம்… ஸ்டாலினுடன் மோதும் அமைச்சர்…!!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் வேலுமணிக்கு இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்துக் கட்சியினரும் ஒருவருக்கொருவர் விமர்சித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் எஸ்பி. வேலுமணிக்கு இடையே நீண்ட காலமாக மறைமுக மோதல் நடந்து வருகிறது. இந்த சூழலில் தேர்தல் நெருங்குவதால் இந்த மோதல் தீவிரம் அடைய தொடங்கியுள்ளது. நேற்று கோவையில் நடந்த திமுக கூட்டத்தில் ஒரு பெண் நுழைந்து குழப்பம் விளைவித்தார். அவர் அதிமுகவை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. அதேபோல ஸ்டாலினும் வேலுமணியை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என வியூகங்களை வகுத்து வருவதாக கூறப்படுகிறது.

Categories

Tech |