Categories
மாநில செய்திகள்

தீவிரமடையும் குரங்கம்மை…. “தடுப்பு நடவடிக்கைகளில் கேரள அரசு தீவிரம்”… மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரிக்கை….!!!!!!!!!

உலகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற நேரத்தில் தற்போது குரங்கம்மை நோய் அறிகுறிகளும் பல இடங்களில் காணப்படுகின்றது. முதன்முறையாக ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ நாட்டில் தான் குரங்கம்மை நோய்க்கான அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின் ஐரோப்பா, இங்கிலாந்து ஐக்கிய அரபு நாடுகளில் பரவி வருகின்றது. இந்த நிலையில் தற்போது ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 55 நாடுகளில் குரங்கம்மை நோய் பாதிப்பு அதிகரித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதனால் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகள் அனைவரையும் தீவிர விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது. மேலும் கடந்த நான்கு வாரங்களில் தான் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்த ஒருவருக்கு குரங்குகம்மை  நோயின் அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்பின் அந்த பயணியுடன் வந்த இரண்டு பேருக்கும் குரங்கம்மை அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் இவர்கள் அனைவரும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருக்கின்றனர்.

இந்நிலையில் முதன் முதலில் கேரளாவில் குரங்கம்மை நோயின் அறிகுறிகள் தென்பட்ட காரணத்தினால் குரங்கு காய்ச்சலை தடுக்கும் நடவடிக்கைகள் எடுப்பதில் கேரள அரசு தீவிரம் காட்டி வருகின்றது. இதற்கிடையே கேரளாவில் குரங்கு காய்ச்சலை தடுப்பதற்கான பயிற்சிகள் முறையாக நடைபெற்று வருவதாகவும் இதுவரை 1200க்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை மந்திரி அறிவித்துள்ளார். மேலும் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் வேறு யாருக்கும் இந்த நோயின் அறிகுறிகள் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |