குரங்கம்மை தொடர்பாக புதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. குரங்கு அம்மை பாதித்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளை பரிசோதிக்க வேண்டும் என்றும், போதிய படுகை வசதிகளை சிகிச்சைக்கு தயார் நிலையில் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே கேரளாவில் குரங்கு காய்ச்சலால் சந்திக்கப்படும் நபர் ஒருவர் கண்காணிப்பில் உள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். இவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு அமீரகத்தில் இருந்து கேரளா வந்தவர்.
அவர் பலருடன் தொடர்பில் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குரங்குக்கு காய்ச்சலின் முக்கிய அறிகுறிகள் காய்ச்சல் மற்றும் பெரியம்மை போன்ற சொறி. சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவருக்கு இந்த அறிகுறிகள் உள்ளது. முதற்கட்ட பரிசோதனையில் குரங்கு காய்ச்சல் சந்தேகம் ஏற்பட்டதை எடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். நோயாளியின் குடும்ப உறுப்பினர்கள் சிறப்பு கண்காணிப்புக்கு மாற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் குரங்குமை தொடர்பாக போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. குரங்கம்மை பாதித்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளை கட்டாயம் பரிசோதிக்க வேண்டும் எனவும் போதிய படுக்கை வசதிகளை சிகிச்சைக்கு தயார் நிலையில் வைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.