உக்ரைன் நாட்டில் தவித்து வரும் தமிழக மாணவர்களை அரசு பத்திரமாக மீட்டு உள்ளது.
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே கடுமையான போர் நிலவி வருவதால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் அங்கு தவித்து வரும் தமிழர்கள் மற்றும் மாணவர்களை தமிழக அரசு மீட்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக 24 மாணவர்களை இந்தியாவிற்கு மீட்டு வந்துள்ளது. இதனையடுத்து மீண்டும் 21 தமிழக மாணவர்கள் பத்திரமாக சென்னைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இவர்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார். இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில் எங்களை மீட்டு வந்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு மிகவும் நன்றி எனவும், எங்களைப்போல் தவிக்கும் மற்ற மாணவர்களையும் விரைவில் மீட்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும் 37 மாணவர்களும் தமிழகம் வந்துள்ளனர். இதனையடுத்து சென்னையில் இருந்து மாணவர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.