Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தீவிரமாக நடைபெற்ற துப்புரவு பணிகள்…. அதிரடியாக ஆய்வு செய்த அதிகாரிகள்….!!

பேரூராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணியை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாவநாசம் பேரூராட்சி 2-வது வார்டுக்கு உட்பட்ட தெப்பக்குளம்  தெரு, வாணியை தெரு, வடுக தெரு, விநாயகர்புரம் ஆகிய பகுதிகளில் பேரூராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. இந்த பணியானது கவுன்சிலர் முத்துமேரி  மைக்கேல்ராஜ் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இதனையடுத்து தெருக்களில் உள்ள குப்பை, செடி கொடி, முட்புதர்கள் ஆகியவற்றை ஊழியர்கள் அகற்றி தெருக்களை சுத்தம் செய்துள்ளனர். மேலும் அப்பகுதியில் ஆல் குழாயுடன் குடிநீர்  மினி பவர் பம்பு சீரமைக்கப்பட்டுள்ளது. இந்த பணியினை சுகாதார ஆய்வாளர் பரமசிவம், சுகாதார மேற்பார்வையாளர் நித்தியானந்தம் உள்ளிட்ட பலர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர்.

Categories

Tech |