Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தீவிரமாக நடைபெற்ற தேர்தல்…. இரு கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதல்…. போலீஸ் விசாரணை….!!

அ.தி.மு.க.வினர் காங்கிரஸ் கட்சியினரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ராம்நகர் ஜோசப் பள்ளியில் 11-வது வார்டிற்கான  வாக்குச் சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வார்டில் அ.தி.மு.க. மற்றும் காங்கிரஸ் சார்பில்  வேட்பாளராக போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இரு தரப்பினருக்கும் இடையே பூத் சிலிப் வினியோகம் செய்வதில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் அ.தி.மு.க.வை சேர்ந்த பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பிரகாஷ், ரெக்ஸ் ஆண்டோ  , ஜேசு ராஜன் ஆகியோரை பாட்டில்களை கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்தவர்களை அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |