வாக்குச்சாவடியில் பா.ஜ.க. வேட்பாளர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 20-வது வார்டில் சார்பில் ஹேமாமாலினி என்பவர் பா.ஜ.க. சார்பில் வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்நிலையில் நேற்று வாக்குச்சாவடியில் வைத்து ஹேமாமாலினிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் கோபமடைந்த ஹேமாமாலினி வாக்குச் சாவடியில் வைத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் ஹேமாமாலினிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதனையடுத்து ஹேமாமாலினி போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளார் . இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.