Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“தீவிரமாக நடைபெற்ற பணி” திடீரென வெளிவந்த 3 சிலைகள்…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!!!

விவசாய நிலத்தில்  3 சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள செருவாவிடுதி ஊராட்சியில்  பரவை என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் அமைந்துள்ள விவசாய நிலத்தில் விவசாயிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் மண் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மண்ணில் சேதம் அடைந்த அம்மன் சிலை உள்ளிட்ட 3 சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை பார்த்த சமூக ஆர்வலர் ஒருவர் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார்.

மேலும் இது குறித்து அவர் கூறியதாவது. இங்கு கருங்கல்லால் செய்யப்பட்ட  3 சிலைகள் கிடைத்துள்ளது. இதனையடுத்து சிலைகள்  கிடைத்த இந்த இடத்தில் சுடுமண் செங்கல் படிமங்களும் காணப்படுகிறது. எனவே தொல்லியல் துறை அதிகாரிகள் இந்த இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |