சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் போடப்படுகின்றது.
தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்நிலையில் அரசு மருத்துவமனைகளில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்படுகிறது. எனவே கொரோனா தடுப்பூசி 40 வயதிற்கு மேற்பட்டோர் அவசியம் போட்டுக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.