Categories
உலக செய்திகள்

தீவிரமாக பரவும் குரங்கு காய்ச்சல்…. கட்டாயமாக தனிமைப்படுத்த வேண்டும்….. பிரபல நாட்டில் அதிரடி அறிவிப்பு…!!

உலக நாடு முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்று பரவ தொடங்கியது. அப்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டது. தற்போது வெளி நாடுகளில் பலவற்றில் ‘மங்கி பாக்ஸ்’ என்று அழைக்கப்படுகிற குரங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காச்சல் கடந்த 21ஆம் தேதி நிலவரப்படி மொத்தம் 12 நாடுகளில் 92 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை குரங்கு காய்ச்சலால் பாதிப்படைந்தவர்கள் யாரும் பலியாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குரங்கு காய்ச்சல் பாதிப்பு உடையவர்களுடன் உடல் ரீதியான தொடர்பு கொண்டவர்கள், அறிகுறிகளை கொண்டிருந்தால் அவர்கள் அதிக ஆபத்தில் இருப்பார்கள் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இந்நிலையில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்த வேண்டும் என்று பெல்ஜியம் நாடு அறிவித்துள்ளது. அங்கு கடந்த வாரம் 4 பேருக்கு குரங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |