வாக்குச்சாவடியில் புகுந்த பாம்பு தீயணைப்பு வீரர்கள் பிடித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சி. எம். எஸ். தனியார் பள்ளியில் வாக்கு சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது . இங்கு தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென காட்டு பகுதியில் இருந்து பாம்பு ஒன்று வாக்கு சாவடிக்குள் நுழைந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி பாம்பை பிடித்தனர். அதன் பின்னர் பாம்பை அருகில் உள்ள வனப்பகுதிக்கு கொண்டு விட்டுள்ளனர். இதனையடுத்து அதிகாரிகள் பணியை தொடர்ந்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.