Categories
தேசிய செய்திகள்

தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா, அமெரிக்கா தொடர்ந்து செயல்படும் – பிரதமர் மோடி உறுதி!

இந்தியா-அமெரிக்கா இடையே 3 ஒப்பந்தங்கள் பிரதமர் மோடி – அதிபர் ட்ரம்ப் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது. இந்தியா-அமெரிக்கா இடையே பாதுகாப்புத்துறையில் ரூ.21 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும் அமெரிக்காவின் ராணுவ ஆயுதங்கள், அப்பாச்சி மற்றும் ரோமியோ ஹெலிகாப்டர்களை இந்தியாவிற்கு தர ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இருந்து எண்ணெய் ஏரிவாயு இறக்குமதி செய்ய ரூ.14,20,000 கோடிக்கு ஒப்பந்தமாகியுள்ளது. இதனை தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, கடந்த 8 மாதங்களில் அதிபர் ட்ரம்பை சந்தித்து பேசியது இது 5வது முறை என்று கூறினார். இந்தியா – அமெரிக்கா உறவு தொடர்பான பல்வேறு அம்சங்கள் மற்றும் வர்த்தகம், ராணுவ ஒத்துழைப்பு, பாதுகாப்பு குறித்தும் அதிபர் டிரம்ப் உடன் விவாதித்தாக தெரிவித்த மோடி, அதிபர் டிரம்ப்புடன் விவாதித்ததாக தகவல் அளித்துள்ளார்.

தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளுக்கு எதிராக இந்தியா, அமெரிக்கா தொடர்ந்து செயல்படும். அணுமின் உற்பத்தி திட்டங்கள் தொடர்பாக இந்தியாவுக்கு எரிவாயு அளிக்கும் முக்கியமான நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. இந்தியா அமெரிக்கா இடையிலான தொடர்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துளளார்.

Categories

Tech |