அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜோ பைடன் வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்றத்தில் வைத்து பதவி ஏற்றார். பின்னர் பேசிய ஜோ பைடன், கொரோனாவால் உயிரிழந்த லட்சக்கணக்கான மக்களுக்கு அஞ்சலி செலுத்துவோம். அமெரிக்காவின் நாள் இது.. ஜனநாயகத்துக்கான நாள் இது- ஜோ பைடன் அமெரிக்கா பல சவால்களை கடந்து வந்துள்ளது – ஜோ பைடன் அமெரிக்காவில் ஆட்சி மாற்றங்கள் அமைதியாக நடந்தன.. ஆனால் சில நாட்களுக்கு முன்னர் வன்முறை இங்கு நிகழ்ந்தது
நமக்கான சவால்களை எப்படி எல்லாம் கடக்கப் போகிறோம் என்பதை உலகமே பார்த்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவை, ஒவ்வொரு அமெரிக்கரையும் பாதுகாப்பேன் என உறுதிமொழி அளிக்கிறேன். இந்த தேசத்தை காப்பாற்றுவார்; கடவுள் நாட்டின் தடைகளை தகர்க்க துணை நிற்பார். அரசியல் வேறுபாடுகளை களைந்து ஒற்றை அமெரிக்கா தேசமாக ஒருங்கிணைந்து நிற்போம். வேலைவாய்ப்பு உள்ளிட்ட அமெரிக்கர்களின் அச்சம் நீக்கப்படும். பொய்கள் வீழ்த்தப்பட்டு உண்மைகள் வெல்ல வேண்டும்.
அனைத்து அமெரிக்கர்களுக்குமான அதிபராக நான் இருப்பேன் என உறுதி அளிக்கிறேன். அமெரிக்கர்களிடையே மாற்று கருத்துகளால் பிளவுகள் ஏற்பட்டுவிடக் கூடாது. நமது வரலாறு போராட்டங்கள், சவால்களை எதிர்கொண்டவை. உலக யுத்தம், பொருளாதார சரிவு என அத்தனையில் இருந்தும் மீண்டிருக்கிறது அமெரிக்கா. அமெரிக்காவின் ஆகப்பெரும் பலமே ஒற்றுமை- ஒற்றுமையால்தான் வளர்ச்சி சாத்தியம்.
வாக்குரிமைக்கு பெண்கள் போராடிய அமெரிக்காவில்தான் இப்போது முதல் பெண் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்றுள்ளார். அமெரிக்காவில் அனைவருக்குமான சமமான நீதி என்பதை தாமதப்படுத்தமாட்டோம். அரசியல் தீவிரவாதம், வெள்ளை இனவாதம் உள்ளிட்டவற்றை தூக்கி எறிய வேண்டிய தேவை உள்ளது அமெரிக்கர்களாகிய நாம் ஒன்றிணைந்து அனைத்து தீவிரவாதங்களையும் முறியடிக்க வேண்டும் என ஜோ – பைடன் பேசினார்.