தீவிரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்ட நாடுகள் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கிறார்கள் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் தீவிர வாத தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில் பாகிஸ்தான் – சீனா ஆப்கானிஸ்தான் – தலிபான் போன்ற நாடுகளுக்கு இடையே தீவிரவாத தாக்குதல் வலுப்பெற்றிருக்கிறது. இந்நிலையில் தாக்குதல் நடைபெற்றாலும் அதற்கு பொறுப்பேற்க எந்த ஒரு தீவிரவாத அமைப்பு முன்வரும் நிலையில் இல்லை. இதில் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் தரும் நாடுகளும் இருக்கின்றன.
இதுகுறித்து மத்திய அமைச்சர், தீவிரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்ட நாடுகளே தீவிரவாதிகளுக்கு தஞ்சம் கொடுத்து, ” நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம்” என நாடகமாடி வருகிறது என்று கூறியுள்ளார். இது பற்றிய கருத்தை மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் ஒரு கூட்டத்தில் பேசும் பொழுது, பாகிஸ்தானின் பெயரைக் வெளிக்காட்டி கூறாமல், மும்பை தாக்குதல், அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் போன்ற சம்பவங்களால் உலக நாடுகள் தீவிரவாதத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.