ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்திற்கு வந்ததை தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மக்களாட்சியை அப்புறப்படுத்தி அதிகாரத்திற்கு வரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கைவசம் வந்துள்ள நிலையில் ஆட்சி அதிகாரத்தை முறையாக தொடர்வதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பிறகு கிட்டத்தட்ட ஆப்கன் சிறைகளில் இருந்த அத்தனை தீவிரவாதிகளையும் விடுவித்துவிட்டனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து இனி உலகத்திற்கு அதிலும் குறிப்பாக இந்தியாவிற்கு பெரும் தலைவலியாகவும், அச்சுறுத்தலாகவும் இருக்கும் என்று பலர் எச்சரித்து வருகின்றனர்.