காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராக ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ராணுவ அதிகாரி மற்றும் வீரர் உட்பட 2 பேர் பலியாகினர்.
காஷ்மீரில் உள்ள பூஞ்ச் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக இந்திய ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் ராணுவ வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த ராணுவத்தினர் மற்றும் தீவிரவாதிகள் இடையே துப்பாக்கி சூடு நடந்தது. இந்த துப்பாக்கி சூட்டில் ராணுவ வீரர் மற்றும் அதிகாரி என இந்திய ராணுவம் தரப்பில் இரண்டு வீரர்கள் வீரமரணம் எய்தினர்.
இந்தப் பகுதியில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு பயங்கரவாதிகள் நடத்திய திடீர் துப்பாக்கிச் சூட்டில் 5 வீரர்கள் கொல்லப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இப்பகுதியில் ஏற்பட்டு வரும் அசம்பாவிதம் காரணமாக பூஞ்ச் நெடுஞ்சாலை மூடப்பட்டது. கடந்த 10ஆம் தேதி ராணுவ வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய அதே தீவிரவாதிகள் தான் தற்போதும் தாக்குதல்கள் நடத்தி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.