தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக தமிழகத்தில் குறைந்து கொண்டே வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், இன்றும் நாளையும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி இன்றும் நாளையும் அனுமதி மறுக்கப்பட்ட இடங்களில் கடைகளை திறக்கக் கூடாது. திறக்கப்படும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும். மேலும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.