நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்ததன் காரணமாக போது பாதிப்பு சற்று குறைந்துள்ளது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர். இருப்பினும் கொரோனா 3-வது அலை பரவலை தடுக்க மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைளில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில் தெலுங்கானாவில் கொரோனா மூன்றாவது அலையை தடுக்க தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே பொது இடங்களில் நடமாட அனுமதிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி திரையரங்குகள், பேருந்துகள், கோவில் உள்ளிட்ட பொது இடங்களுக்கு வரக்கூடியவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்கவேண்டும். 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.