Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தீவிர கண்காணிப்பு பணி…. வசமாக சிக்கிய 2 நபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

சாராயம் கடத்திய குற்றத்திற்காக காவல்துறையினர் 2 நபர்களை கைது செய்துள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் 2 நபர்கள் சென்றுள்ளனர். அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் முன்னுக்கு பின்னாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த காவல்துறையினர் 2 பேர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் சாராயம் இருந்தது தெரியவந்துள்ளது.

அதன்பின் இருவரிடமும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் விஜய் மற்றும் ராஜேந்திரன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் காரைக்காலிலிருந்து சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 220 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |