மலையாள திரையுலகின் பிரபல நடிகரும், இயக்குனருமான ஸ்ரீனிவாசன் சில நாட்களுக்கு முன்பே இருதயத்தில் ஏற்பட்ட தொந்தரவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதயத்தில் மூன்று அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு ஆஞ்ஜியோகிராம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது அவர் வெண்டிலேட்டர் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவர் பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று பலரும் இறைவனை பிரார்த்தனை செய்து வருகின்றனர்.