நாமக்கல் மாவட்டத்தில் பேருந்துகளில் முக கவசம் அணிந்து பயணிக்கிறார்களா என்று காவல் துறையினர் ஆய்வு செய்துள்ளனர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த சுகாதாரத் துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பொது இடங்களில் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பொது மக்கள் முறையாக பின்பற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்திலுள்ள பள்ளிபாளையத்திலிருக்கும் காவிரி பாலத்தில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அந்த வாகனங்களை நிறுத்தி முககவசம் அணியாமல் சென்றவர்களிடத்தில் அபராதம் வசூலித்துள்ளனர். மேலும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளை நிறுத்தி பயணிகள் முககவசம் அணிந்துள்ளனரா என்றும் சமூக இடைவெளியை கடைப்பிடித்துள்ளனரா என்றும் பேருந்துகளில் ஏறி ஆய்வு செய்துள்ளனர். இதனையடுத்து அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றினால் அபராதம் விதிக்கப்படும் என காவல்துறையினர் பேருந்து டிரைவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்