ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காப்பீடு புதுப்பிக்காத மற்றும் தகுதி சான்று இல்லாத வாகனங்கள் இயங்குவதாக வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு புகார் வந்துள்ளது. அந்த புகாரின் படி நம்பியூர் மற்றும் கோபிசெட்டிபாளையம் பகுதிகளில் அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையின் போது தகுதி சான்று மற்றும் காப்பீட்டு சான்று இல்லாத 2 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோன்று தகுதி சான்று மற்றும் காப்பீட்டுச் சான்றை புதுப்பிக்காத 2 ஆட்டோக்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த 4 ஆட்டோக்களுக்கும் ரூபாய் 35 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் தகுதி சான்று மற்றும் காப்பீட்டுச் சான்று இல்லாத புதுப்பிக்காத வாகன ஓட்டிகளுக்கு விபத்து நேரத்தில் இன்சுரன்ஸ் தொகை கிடைக்காது என்பதால் வாகன ஓட்டிகள் முறையாக சான்றுகளை வைத்து வாகனத்தை ஓட்ட வேண்டும் என வட்டார போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.