காரில் சாராயம் கடத்தி வந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கிளாக்காடு-ஆத்தூரான்கொட்டாய் சாலையில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக காரில் சாராயம் கடத்தி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து வனத்துறையினர் அவ்வழியாக வந்த வாகனங்களை சோதனை செய்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தியுள்ளனர்.
ஆனால் அந்த கார் வனத்துறையினரை கண்டதும் நிற்காமல் வேகமாக சென்றுள்ளது. இதனையடுத்து வனத்துறையினர் அந்த காரை 10 கிலோமீட்டர் தூரம் துரத்தி சென்று மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் அவர்கள் எருக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்த பிரபு, தியாகராஜன் ஆகியோர் என்பதும், சாராயத்தை விற்பதற்காக காரில் கொண்டு வந்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து வனத்துறையினர் அவர்கள்2 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கார், சாராயம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்