சட்டவிரோதமாக மணல் கடத்தி வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவையாறு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த 2 மாட்டு வண்டிகளை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் சட்டவிரோதமாக மாட்டுவண்டியில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.
இந்நிலையில் மணல் கடத்தி வந்த 2 பேரில் ஒருவர் மாட்டு வண்டியை அங்கையே நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து காவல்துறையினர் வண்டியில் சட்டவிரோதமாக மணல் அல்லி வந்த வில்லியம் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வண்டிகளை பறிமுதல் செய்து தப்பி ஓடிய நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.