உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த மது பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில் உரிய ஆவணம் இன்றி செந்தில்குமார் என்பவர் 48 மதுபாட்டில்களை மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து காவல்துறையினர் செந்தில்குமாரை கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் உரிய ஆவணம் இன்றி கொண்டுவந்த 48 மது பாட்டில்களை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.