சட்ட விரோதமாக புகையிலையை பதுக்கி வைத்து விற்பனை செய்த பெட்டி கடை உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வினோத் என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடையில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது சட்டவிரோதமாக பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து வினோத்தை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 60 பாக்கெட் புகையிலையை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.