Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. தம்பதியினர் செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த தம்பதியினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அய்யம்பாளையம் குட்டிகரடு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த தம்பதியினரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் வேல்முருகன் மற்றும் ஜோதி என்பது தெரியவந்துள்ளது.

இவர்கள் சட்டவிரோதமாக அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதனை அடுத்து வேல்முருகன் மற்றும் ஜோதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 1 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |