25 ஆயிரம் ரூபாய் பணத்தை வீசி சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெருமாள்பட்டி பகுதியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தாசில்தார் வானதி தலைமையிலான காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகத்தின் பெயரில் நின்றுகொண்டிருந்த 4 பேரை காவல்துறையினர் அழைத்துள்ளனர்.
இதனை அந்த நபர்கள் கையிலிருந்த 25,500 ரூபாய் பணத்தை அங்கேயே வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்து விட்டனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.