கஞ்சா விற்பனை செய்த நபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பழைய பேருந்து நிலையத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு நபரை காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் அவரிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதன்பிறகு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த திக்கிபாபு என்பது தெரியவந்தது. அதன்பிறகு திக்கிபாபுவிடம் இருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து கைது செய்தனர்.
இதேப்போன்று சாலைகிராமம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அந்த தகவலின்படி இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினரை கண்டதும் ஒருவர் ஓடியுள்ளார் . இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் அந்த நபரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அந்த சோதனையில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. மொத்தம் 200 கிராம் கஞ்சா இருந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் கைலாசபுரம் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பது தெரியவந்தது.