சட்ட விரோதமாக மது விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரி அருகே மேட்டுப்பாளையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் அழைத்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வகுமார் என்பது தெரியவந்தது.
அதன்பிறகு காவல்துறையினர் செல்வகுமார் கையில் வைத்திருந்த பையை சோதனை செய்துள்ளனர். அந்த சோதனைகளில் பையில் மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் செல்வகுமாரை கைது செய்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.