மலையடி வாரத்தில் இருந்த 2 நாட்டு வெடிகுண்டுகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள கிருஷ்ணன்கோவில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சிவப்பு நூல் சுற்றப்பட்டு 2 நாட்டு வெடிகுண்டுகள் இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் வாலியை மண்ணுக்குள் புதைத்து பத்திரமாக வெடிகுண்டுகளை மீட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இந்த வெடிகுண்டு விலங்குகளை வேட்டையாட வைக்கப்பட்டுள்ளதா, இல்லை யாராவது பதுக்கி வைத்துள்ளனரா என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.