Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. லாட்டரி சீட்டுகள் பறிமுதல்…. போலீஸ் அதிரடி…!!

சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருவெண்ணைநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமையிலான குழு மேட்டுக்குப்பம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பேருந்து நிலையத்தில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் விசாரித்தனர். அந்த விசாரணையில் பொன்னைவலம் கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீசன் என்பது தெரியவந்தது. இவரிடம் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் இருந்தது. இதை பறிமுதல் செய்த காவல்துறையினர் ஜெகதீசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |