கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தாளமுத்துநகரில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அச்சமயம் மாதாநகர் சந்திப்பு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த மணிராஜ் என்பவரை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.
இதேபோன்று ராஜபாளையம் சந்திப்பில் கஞ்சா விற்ற சந்தனகுமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்து அவரிடமும் 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.