Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய 2 வாலிபர்கள்….. போலீஸ் விசாரணை….!!

சட்டவிரோதமாக விலங்குகளை வேடையாடிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர்-கருப்பூர் பகுதியில் வனக்காவலர்கள் திருப்பதிராஜா,சம்பத்குமார், அப்துல்,ரஹிம்,சதீஸ் குமார், பிரகாஷ் , உதயகுமார், சாமிக்கண்ணு, கருணாநிதி ஆகியோர் தீவிர ரோந்து  பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக சந்தேகத்தின் பெயரில் கையில் துடிப்புடன் வந்த 2 வாலிபரை அழைத்து காவல்துறையினர்  விசாரணை செய்துள்ளனர்.

அந்த விசாரணையில் அவர் அவர்கள் அடைக்கப்பன், கருப்பையா என்பதும், சட்டவிரோதமாக  உடும்பு , முயல் ஆகியவற்றை வேட்டையாடி  வந்தது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்து அபராதம்  விதித்துள்ளனர்.

Categories

Tech |