Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய 3 வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை ….!!

ஆயுதங்களுடன் சுற்றி தெரிந்த 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோவிலூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மன்னார்குடி சாலையில் சந்தேகத்தின் பெயரில் நின்று கொண்டிருந்த மூன்று வாலிபர்களை காவல் துறையினர் பிடித்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் சட்டவிரோதமாக ஆயுதங்களுடன் சுற்றி திரிந்ததும் அவர்கள் அ.தி.மு.க. பிரமுகர் மதன் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் என்பதும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து காவல்துறையினர் தப்பியோட முயன்ற மந்திரமூர்த்தி, சுரேஷ், கார்த்திக் ஆகிய 3 பேரையும் மடக்கிப்பிடித்து கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்த அறிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்து 3 பேரையும் திருச்சி மத்திய சிறையில்  அடைத்துள்ளனர்.

Categories

Tech |