Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக சுற்றித் திரிந்த இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் சமாதானபுரத்தை சேர்ந்த செல்வகுமார் மற்றும் பெரியசாமி என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளனர்.

இதனை அடுத்து செல்வகுமார் மற்றும் பெரியசாமி ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |