மணல் அள்ளிய 6 பேருக்கு 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள உடையாரோந்தல் பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியில் வனத்துறைக்கு சொந்தமாக இருக்கும் ஓடையில் சில மர்ம நபர்கள் மணலை அள்ளிக் கொண்டு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் டிராக்டரில் மணல் அள்ளிக் கொண்டிருந்தார் ஆறு பேரையும் பிடித்து விசாரணை செய்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மணல் கடத்திய குற்றத்திற்காக 60 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டனர். மேலும் இதுபோன்று வனப்பகுதிக்கு சொந்தமான இடங்களில் மணல் அள்ளினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.