Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபர்களை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நாலுகால் மண்டபம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக சந்தேகத்தின் பெயரில் வந்த 3 வாலிபர்களை காவல்துறையினர் அழைத்து சோதனை  செய்துள்ளனர். அந்த சோதனையில்  அவர்கள் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து காவல்துறையினர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த கோபி, வேல்முருகன், சரவணன் ஆகிய 3 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 27 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |