Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. தீவிர விசாரணையில் போலீஸ்…..!!!

பொதுமக்களிடம் இரிடியம் விற்பனை செய்ய முயன்ற  வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சூரக்கோட்டை-மன்னார்குடி சாலையில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகத்தின் பெயரில் நின்று கொண்டிருந்த 5 பேரை காவல்துறையினர் அழைத்து விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் அவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கணேசன், முனீஸ்வரன், சின்னமுத்து, கண்ணன், முனீஸ் என்பதும், அவர்கள் பித்தளை  பானையில் இரிடியம் உள்ளதாக கூறி பொதுமக்களிடம் விற்க முயன்றது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து காவல்துறையினர் அவர்கள் 5 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இந்த கும்பலுடன் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்ற  கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |