சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அம்மையப்பன் கடை வீதி தெருவில் கொரடாச்சேரி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகத்தின் பேரில் நின்ற வாலிபரை காவல்துறையினர் அழைத்து விசாரணை செய்துள்ளனர்.
அந்த விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சகார்தாஸ் என்பதும் சட்டவிரோதமா கஞ்சா விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் அவரை நாகப்பட்டினம் கிளைச்சிறையில் அடைத்துள்ளனர்.