சட்டவிரோதமாக ஆட்டோவில் கடத்தி வந்த ரேஷன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள வள்ளிப்பட்டு பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோவை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் ஆட்டோவில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசியை ஆந்திரா மாநிலத்திற்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் ஆட்டோ ஓட்டுனரை கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஆட்டோவில் இருந்த 1200 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்துள்ளனர்.