திருநங்கையை கொலை செய்த குற்றத்திற்காக வாலிபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் அருகே பால் ஊத்தங்கரை பகுதியில் பனிமலர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு திருநங்கை ஆவார். இவர் கடந்த 2021-ம் ஆண்டு தைல மர தோப்பில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்த தகவலின் பேரில் பரங்கிப்பேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பனிமலரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் பரங்கிப்பேட்டை காவல்துறையினர் நேற்று முன்தினம் பெரியகுமட்டி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காவல்துறையினரை கண்டவுடன் ஒரு வாலிபர் ஓடியுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் மாணவரை துரத்தி சென்று மடக்கி பிடித்துள்ளனர்.
அதன்பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் முட்லூர் பகுதியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவர் என்பது தெரியவந்தது. அதன்பின் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது. அதாவது இவர் கடந்த ஆண்டு ஒரு திருநங்கையை உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். ஆனால் திருநங்கை பணம் கொடுத்தால் தான் உல்லாசத்திற்கு வருவேன் என கூறியுள்ளார். இதனால் வாலிபர் தன்னிடம் பணமில்லை என்று கூறி உல்லாசத்திற்கு வருமாறு பனிமலரிடம் கெஞ்சியுள்ளார். இதற்கு பனிமலர் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த வாலிபர் ஒரு கம்பை எடுத்து பனி மலரை கொடூரமான முறையில் அடித்து கொலை செய்ததுள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் வாலிபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்