சாராயம் கடத்திய குற்றத்திற்காக 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பொன்வெளி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த சாலையில் சந்தேகத்திற்குரிய வகையில் 2 நபர்கள் நின்றுகொண்டிருந்தனர். அவர்களை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் வினோத் மற்றும் பாலாஜி என்பது தெரியவந்துள்ளது.
மேலும் இருவரும் அந்த பகுதியில் சட்ட விரோதமாக சாராயம் விற்றது தெரியவந்துள்ளது. இவர்கள் காரைக்கால் மற்றும் வானூர் பகுதியிலிருந்து சாராயத்தை கடத்தி விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் அந்த விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வினோத் மற்றும் பாலாஜி ஆகியோரை கைது செய்துள்ளனர்.