சாராய கடத்தலில் ஈடுபட்ட குற்றத்திற்காக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள காக்கழனி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காக்கழனி தோப்பு தெருவில் சந்தேகப்படும் படியாக நின்ற ஒருவரை அழைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசித்துவரும் தங்கபாண்டியன் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் இவர் காரைக்கால் மற்றும் வாஞ்சூர் பகுதியிலிருந்து சட்ட விரோதமாக சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் தங்கபாண்டியனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.