கஞ்சா கடத்தி சென்ற இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கலிங்கராஜபுரம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கேரளா பதிவெண் கொண்ட மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை போலீசார் நிறுத்தி விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் கேரள மாநிலத்தை சேர்ந்த நிஷான் மற்றும் ரதீஷ் என்பது தெரியவந்தது. மேலும் இருவரும் விற்பனை செய்வதற்காக கஞ்சாவை கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் 2 வாலிபர்களையும் கைது செய்ததோடு, அவர்களிடமிருந்த 140 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.