சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுசீந்திரம் சப்-இன்ஸ்பெக்டர் கபிரியேல் தலைமையில் ஒரு குழு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் மணக்குடி நியாய விலை கடை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு நபரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் கண்ணங்குலம் பகுதியை சேர்ந்த ஆசிக் என்பது தெரியவந்தது.
அவரிடம் 1 கிலோ கஞ்சா இருப்பதும் தெரியவந்தது. இதை பறிமுதல் காவல்துறையினர் ஆசிக்கை கைது செய்தனர். இதேப்போன்று சுசீந்திரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த முத்தழகன் என்பவரையும் கைது செய்தனர். இவரிடமிருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.