தீவிர ரோந்து பணியில் போது காவல்துறையினரால் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் ரயில்வே நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பாபு தலைமையிலான குழு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சில மூட்டைகள் கேட்பாரற்று கிடந்துள்ளது. இதை காவல்துறையினர் பிரித்து பார்த்துள்ளனர். அந்த மூட்டையில் ரேஷன் அரிசி இருந்துள்ளது.
அதில் மொத்தம் 175 கிலோ ரேஷன் அரிசி இருந்துள்ளது. இதை புஷ்பராஜ் என்பவர் கடத்த முயற்சி செய்துள்ளார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் புஷ்பராஜை கைது செய்து அரிசியையும் பறிமுதல் செய்தனர்.